மாவை கூட்டத்தில் மணியும் இல்லை:சைக்கிளும் இல்லை?தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தியும், இராணுவ பாணி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவம் என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என ஆராயவும் தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கொண்ட போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகள், தமிழ் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் இன்று சந்திப்பில் கலந்து கொண்டன.

எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. மணிவண்ணன் அணியை அழைக்காது விடின் தாம் பங்கெடுப்பதாக முன்னணியின் தலைவர்களிடமிருந்து மாவைக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மணிவண்ணன் அணிக்கு அழைப்புவிடுக்காமல் மாவை தரப்பு கூட்ட அழைப்பினை விடுத்திருந்தது. ஆயினும் கஜேந்திரகுமார், கஜேந்திரன் தரப்பு பங்கெடுக்கவில்லை.மணிவண்ணன் தரப்பும் பங்கெடுக்கவில்லை.


No comments