இலங்கை இராணுவத்தில் இணைந்து தற்கொலை?


அனுராதபுரம் – தந்திரிமலையில் அமைந்துள்ள ஐந்தாவது தேசிய பாதுகாப்பு படைப் பிரிவின் முகாமில் பயிற்சி பெற்று வந்த, இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட இளைஞன் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த இளைஞன் மூன்று தினங்களுக்கு முன்னர் முகாமில் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

நொச்சியாகம – ரனோருவ, லிந்தவெவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவருகிறது.

தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் அவர் இன்று அதிகாலை 1.30 அளவில் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதுடன் இதன் பின்னர் தொலைபேசியை தரை தூக்கி அடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் தனிப்பட்ட காரணத்தால் இந்த இளைஞன் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளதுடன், தந்திரிமலை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments