விமலுடன் அடைக்கலமான ரத்னபிரிய?

 


வன்னியில் தமிழ் மக்களது காப்பான் என தெற்கினால் கொண்டாடப்பட்ட இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய கடந்த தேர்தலுடன் குப்பைகள் வீசப்பட்டிருந்த நிலையில் கோத்தா தரப்பும் கண்டுகொள்ளாதிருந்தது.

இனியும் கோத்தாவின் கடைக்கண் பார்வைக்கு காத்திருந்து பயனில்லையென்பதை புரிந்து கொண்ட ரத்னபிரிய தற்போது விமல் வீரவன்சவை முன்னிறுத்தி வடக்கிற்கு வருகை தருகின்றார்.

வடக்கிற்கான விமல் வீரவன்ச அணியெனும் அமைப்பினை தோற்றுவித்துள்ள அவர் அதனை முன்னிறுத்தி தனது அல்லக்கைகளை களமிறக்க தொடங்கியுள்ளார்.

வன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தலைவராக பணியாற்றிய ரத்னபிரிய தேர்தலில் இரண்டாயிரத்திற்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

  


No comments