தமிழருக்கு அழிவுதான்:ஸ்நேக் பாபு

 


தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் அழிவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்று ஸநேக் பாபு என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்னதேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


செங்கலடி ரஜமஹாவிகாரையில் காணிகள் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன என்று குற்றம் சுமத்தியுள்ள தேரர், இன்னும் ஒரு வாரத்திற்குள் இது நிறுத்தப்படாவிடின் மட்டக்களப்பு பெரும் விளைவினை எதிர்நோக்கும் என்று மிரட்டியுள்ளார்.


செங்கலடி பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றிருந்த அவர், அங்குள்ள வெட்டாந்தரைகளைக் காண்பித்து வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார். மேலும்,


“இயந்திரங்களால் தோண்டப்பட்டுள்ள இந்த இடத்தில் இதற்கு முன்னர் புத்தர் சிலைகளும், புராதான சின்னங்களும் இருந்தன. 2016இல்தான் இந்த புராதன பிரதேசத்தைக் கண்டுபிடித்தோம்.


இதற்காக அப்போது தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராகவிருந்த வியாழேந்திரன் எனக்கு கொலை அச்சுறுத்தல் விட்டிருந்தார். இப்பொது அவர் இராஜாங்க அமைச்சராக உள்ளபடியால் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து விடயத்தை மூடி மறைத்துள்ளார்.


எனக்கெதிராக எழுபது வழக்குகள் உள்ளன. அதையெல்லாம் தள்ளுபடி செய்து கிழக்கு மாகாண தொல்பொருள்களை பாதுகாக்க எனக்கு உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

No comments