தங்கம் போல மின்னும் மஞ்சள்?

தங்கத்திற்கு ஈடாக இந்தியாவிலிருந்து கடத்தப்படுகின்ற பொருட்களுள் ஒன்றாக சமையலுக்கான மஞ்சள் மாறியிருக்கின்றது.

இந்நிலையில் தென்னிலங்கை களஞ்சியசாலை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் தூள் தொகையுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புளுமெண்டல் பகுதியில் உள்ள குறித்த களஞ்சியசாலையில் இருந்து 33ஆயிரம் கிலோகிராம் மஞ்சள் தூள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மூன்று கொள்கலன்களில் குறித்த மஞ்சள் தொகை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த மஞ்சள் கரைத்து தெளிக்கவேண்டுமென்ற வதந்திகளையடுத்து வகை தொகையற்று மஞ்சள் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆயிரக்கணக்கில் விலை அதிகரிப்பினையடுத்து இந்தியாவிலிருந்து கடல் வழியாக மஞ்சள் கடத்தப்படுவதும் கடற்படையிடம் அகப்படுவதும் தொடர்கின்றது.

No comments