டெனீஸ் குழப்பங்கள் :பின்னணியில் யார்?நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு எதிரான நீதிமன்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.டெனீஸ்வரன் கடைசி நேரத்தில் குழப்பங்களை செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது வழக்கு தொடர்ந்த பா.டெனிஸ்வரன் வழக்கை வாபஸ் பெறுவார் என முன்னர் எதிர்பார்க்கப்பட்ட போதும், இன்று வழக்கை விலக்கிக்கொள்ளவில்லை.

இன்று தொடக்கம் 3 நாட்களிற்கு வழக்கு விசாரணை இடம்பெறும் என முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி இன்று வழக்கு விசாரணை ஆரம்பித்தது.

இன்றைய முதல்நாளில், அப்போதைய ஆளுனர் செயலாளர் சத்தியசீலனும், வடக்கு பிரதம செயலாளர் அ.பத்திநாதனும் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டனர்.

நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் வழக்கை வாபஸ்பெற தயாராக இருப்பதாக பா.டெனீஸ்வரனின் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ தெரிவித்தார். இரு தரப்பும் இணங்கினால் வழக்கை முடித்துக் கொள்ளலாமென நீதிமன்றமும் தெரிவித்தது.

அமைச்சரவையை பதவிநீக்கியது தவறு என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக, விக்னேஸ்வரன் தரப்பினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவது.

பா.டெனிஸ்வரனை பதவி நீக்கியது தவறு என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பை விக்னேஸ்வரன் அமுல்ப்படுத்தவில்லை. அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கே நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவை அமுல்ப்படுத்தாமைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மன்னிப்பு கோருவது.

முறையற்ற விதமான பதவி நீக்கியதற்காக பா.டெனிஸ்வரனிடம் மன்னிப்பு கோருவது.

இதுவரை பா.டெனிஸ்வரனிற்கு ஆன வழக்கு செலவை செலுத்துதல்.

ஆயினும் இந்த கோரிக்கைகளை சி.வி.விக்னேஸ்வரன் தரப்பு சட்டத்தரணி கனகஈஸ்வரன், ஏற்றுக்கொள்ளாமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.


No comments