அடையாளம் காணப்பட்டது தலை!

அம்பாறை சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே ஆணொருவரின் தலை மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருகையில்:-

உயிரிழந்தவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை வழுக்கமடு நீர்க்கால்வாய்ப் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்.

மாடு மேய்த்தவர் உடுதுணிகளை நீர்க்கால்வாய் அருகில் வைத்துவிட்டு கால்வாயில் இறங்கி குளித்துள்ளார். இவ்வேளையில் குறித்த நபரை கால்வாயில் இருந்த முதலைகள் இழுத்துச்சென்றுள்ளன.

மாடு மேய்த்தவரைக் காணவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்த நிலையில் கிராமத்தவர்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது காணாமல்போனவரின் ஆடைகள் கால்வாய் கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டது.

பின்னர் சுமார் 800 மீற்றர் தொலைவில் குறித்த கால்வாயில் மிதந்து வந்த நிலையில் தலை மீட்கப்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட தலை கரைக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட போது உயிரிழந்தவர் 65 வயது மதிக்கத்தக்க றோக்கு ஜோசப் என அவரது சகோதரி அடையாளம் காட்டியுள்ளார்.

No comments