அதிரடியாக அங்கயன் முன்னிற்கு: யாழ்.நிலவரம்!

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் உத்தியோகப்பற்ற வகையில் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கயன் இராமநாதனிற்கு கணிசமான வாக்குகள் வீழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

தீவகத்தில் ஈபிடிபி முன்னணியிலிருந்த போதும் காங்கேசன் துறை ,பருத்தித்துறையென அங்கயன் இராமநாதன் வாக்குகளை பெற்றுள்ளமை முதல்கட்ட தகவல்கள் மூலம் தெரிகின்றது.

இது வரை அசைக்க முடியாத தூணாக இருந்து கூட்டமைப்பு பின்னிற்கு தள்ளப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு,தமிழ் தேசிய மக்கள் முன்னணி,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியென வாக்குகள் பரவலாக வீழ்ந்துள்ளது.

இதனிடையே கிளிநொச்சியில் தனது முதன்மை போட்டியாளரான சந்திரகுமாருடன் சி.சிறீதரன் போட்டியாக வாக்குகளை பெற்றுவருகின்றார்.

எனினும் சந்திரகுமாரின் வாக்கை விடுத்து இரட்டிப்பு வாக்கையே சி.சிறீதரன் பெற்றுவருவது தெரிகின்றது.

எனினும் கிளிநொச்சியில் சந்திரகுமார் பெறும் வாக்குக்கள் யாழில் டக்ளஸின் வெற்றியை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

No comments