மாலியில் நெருக்கடி! அதிபர், பிரதமர் உட்பட பலர் படையினரால் கைது!

மேற்கு ஆபிரிக்கா நாடான மாலியில் அந்நாட்டின் அதிபர், பிரதமர், அமைச்சர்கள், இராணுவ உயர் அதிகாரிகளைப்படையினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

செவ்வாய்க்கிழமை காலை தலைநகர் பமாகோவிலிருந்து 15 கி.மீ (9 மைல்) தொலைவில் உள்ள கேட்டி நகரத்தில் படையினர் கவச வாகனம் மற்றும் இராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டன.

படையினர் பின்னர் பமாகோவின் தெருக்களில் சுதந்திரமாக நகர்ந்து அந்நாட்டின் அதிபர் மற்றும் பிரதமரைக் தடுத்து கைது செய்துள்ளனர். அத்துடன் பல மூத்த அரசாங்க அமைச்சர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த எதிர்க்கட்சி மற்றும் ஆதரவாளர்கள் கீதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் தளமான சுதந்திர நினைவுச்சின்னத்தைச் சுற்றி சதுக்கத்தில் கொண்டாடினர்.

அதிபர் இப்ராஹிம் பூபக்கர் கெஸ்டா, பிரதமர் போபு சிஸ்சே உட்பட தடுத்து வைக்கப்பட்டுள் அதிகாரிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஆப்பிரிக்க ஒன்றியம் கோரியது.

இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுக்கின்றேன் என்று ஆபிரிக்க ஒன்றிய ஆணையாளர் ஃபாக்கி மஹாமத் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

மாலியின் எல்லையில் உள்ள 15 நாடுகள் அந்நாட்டு எல்லை மூடுவதாகவும் மாலிக்கான நிதியுதவிகளை நிறுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளன.

No comments