ரஸ்யருக்கு கொரோனா இல்லை?


தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஸ்யா நாட்டு பிஜை ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

குறித்த ரஸ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று தொடர்பான பி.சீ.ஆர். பரிசோதனை இடம் பெற்று இன்றைய தினம் வியாழக்கிழமை குறித்த அறிக்கையானது மன்னார் நீதவான்   மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் சமர்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையின் பிரகாரம் குறித்த ரஸ்யா நாட்டு பிரஜைக்கு ‘கொரோனா’ தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரஸ்யா நாட்டு பிரஜை சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி எஸ்.டினேசனினால் மிரிகானா ஊடாக குறித்த நபரை ரஸ்யாவிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த கோரிக்கையை ஏற்று குறித்த  ரஸ்யா நாட்டு பிரஜையை சொந்த நாடான ரஸ்யாவிற்கு   மிரிகானா ஊடாக அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  நீதி மன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது 

No comments