தனிமைப்படுத்தப்பட்டவர் மரணம்?

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறையினை சேர்ந்த கணபதிப்பிள்ளை சிவகுரு என்பவரே உயிரிழந்துள்ளார்.


கொரோனா தொற்று சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் பின்னர் நோய் கடுமையடைந்ததையடுத்து யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனிடையே தலைமன்னார் பகுதியில் காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஸ்யபிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மன்னார் நீதவான் நீதிமன்றில்; சந்தேக நபர் முன்னிலைப்புடுத்தப்பட்ட போது குறித்த நபரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.No comments