தெற்கில் கோத்தா வேட்டை?

கம்பஹாவில் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்ட அங்கொடலொக்காவின் மற்றுமொரு துப்பாக்கிதாரியான சமியா எனும் ஆராச்சிலகே சமிந்த சந்தமல் எதிரிசூரிய (41-வயது) இன்று (22) சற்றுமுன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

2001ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரான சமியா அங்கொட லொக்காவுடன் இணைந்து பல கொலைகளை புரிந்துள்ளதுடன், களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டு 8 பேரை படுகொலை செய்ததிலும் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அண்மையில் அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரியும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.


No comments