விடுதலை அரசியலை விளங்கிக்கொள்ளல்

ஈழத்தமிழர்களின் அரசியல் குறைந்தது நான்கு வகையானஅரசியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுநகர்ந்துவருகிறதுஅவையாவனவிடுதலை அரசியல்எதிர்ப்பு அரசியல்இணக்க அரசியல் மற்றும் சரணகதிஅரசியல் ஆகும்விடுதலை அரசியலுக்கும் எதிர்ப்புஅரசியலுக்கும் ஒரு பொதுத்தளம் உள்ளது போலஇணக்கஅரசியலுக்கும் சரணகதி அரசியலுக்கும் பெரும்பாலானசந்தர்ப்பங்களில் ஒரு தொடுகைப் புள்ளி உண்டுஅரசியல்கட்சிகள் அதன் தலைவர்களைப் பொறுத்து அவர்களின்கொள்கைகளும் கோட்பாடுகளும் இலக்குகளும் மாறுபடும்.  

அரசியல் என்பது சாதாரணமானவர்களின் பார்வையில்சாத்தியமற்றது என எண்ணுபவற்றை சாத்தியமாக்கிகாட்டுவதுசாணக்கிய பண்புகளை கொண்;அரசியலானது பெட்டிக்கு வெளியே ( (Thinking outside the box)    ) சிந்திக்கும் தன்மை கொண்டதுஅதாவதுகிடைப்பதை வாங்குதல் அல்லது தருபவற்றைபெற்றுக்கொள்ளும் சாத்தியமானவற்றை அடையும்மனப்பாங்கை தாண்டிவிவேகத்தோடும் தூரநோக்கோடும்உரித்துடைய இலக்கினை அடைவதற்காக காய்களைநகர்த்துவதாகும்தனது தேசத்தின் நலனுக்குமுக்கியத்துவம் கொடுக்கும் தரப்புகள் பெட்டிக்கு வெளியேசிந்திப்பதன் ஊடாக தமது தேச நலனை பூர்த்திசெய்கின்றன


தமிழீழ விடுதலைப் புலிகள் இமாலய சாதனைகள்புரிந்தார்கள் என்று தமிழ்த் தேசம் பெருமையோடுஇன்றுவரை பேசிக்கொள்கிறதுஇது எப்படிசாத்தியமானதுஒரு கைக்குண்டோடு திரியும் நான்கைந்துபள்ளிக்கூடப் பெடியளென அடையாளப்படுத்தப்பட்டவர்கள்எவ்வாறு எதிரியை திகைக்க வைத்து உலகையே வியக்கவைக்கும் சாதனைகளைப் புரிந்தார்கள்

எமக்கு உரித்துடையவற்றை நாம் அடைந்தே ஆகவேண்டும்என்ற இலட்சியத்தில் உறுதியாக இருந்து சமரசமின்றிஅர்ப்பணிப்போடு போராடியதால் அவர்களால் அளப்பரியசாதனைகளைப் படைக்க முடிந்ததுபெட்டிக்கு வெளியேசிந்திக்கும் தன்மை கொண்டதனால்மட்டுப்படுத்தப்பட்டவளங்களோடு மட்டற்ற சாதனைகளை புரிந்தார்கள்பலரால்எண்ணிப்பார்க்க முடியாததை அவர்களால் செயற்படுத்திக்காட்டினார்கள்ஆதலாலேயே அவர்களை அசாதாரணப்பிறவிகளாக எமது தேசம் நோக்குகிறது.

சவால் நிறைந்த பயணம்இலக்கினை எட்டுவதுசாத்தியப்படாது என எண்ணியிருந்தால் எவரும் புதியவரலாறுகளை உருவாக்கியிருக்க முடியாதுதமிழீழவிடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டம்என்பது ஈழத்தமிழர்களின் பன்னெடுங்கால அரசியல்அபிலாசைகளை அடைவதற்கான ஒரு தவிர்க்க முடியாதபாதைதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்மௌனமாகிய பின்னர் ஈழத்தமிழர்களின் இருப்பும்எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டதுசுமார் நாற்பதுஆண்டுகள் தடுத்து நிறுத்தப்பட்ட இனஅழிப்பு துரிதகதியில்நடந்தேறி இன்று கட்டமைப்பு சார் இனஅழிப்பாக தமிழர்தாயகத்தில் தொடர்கிறதுதமிழ்த் தேசத்திற்கு எதிராகநிகழும் அநீதிகளையும் கட்டமைப்புசார் இனஅழிப்பையும்தடுத்து நிறுத்துவதற்கு தேர்தல் அரசியலிலும் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தம்ஜனநாயக ரீதியாகதேர்ந்தெடுக்கப்படும் மக்களின் பிரதிநிதிகளுக்கு சர்வதேசசமூகம் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதனால்விடுதலைப்புலிகளின் தியாகத்தால் சர்வதேசமயப்படுத்தப்பட்டஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைஅடைவதற்குஅதனை திறமையாக கையாளக்கூடியதமிழ்மக்களின் பிரதிநிதிகள் தேவை

முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு பின்னர் இடம்பெற்றஅனைத்து தேர்தல்களிலும்தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குதமிழர் தாயகத்தில் வாழும் மக்கள் ஆணை வழங்கினார்கள்ஆனால்பதிலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டதுஅவர்கள் கொள்கைத் தவறிபோனது மட்டுமன்றிதமிழர் தரப்பிடம் இருந்த பேரம் பேசும்பலத்தையே வீணடித்துவிட்டார்கள்தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோஅதனை முற்றுமுழுதாக முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப்பின்னர் கைவிட்டதுஅத்துடன்உருவாக்கப்பட்டநோக்கத்திற்கு முற்றுமுழுவதும் எதிரான பாதையில்பயணிக்கிறதுஅதனை உருவாக்கியவர்களையேபயங்கரவாதிகளாகவும்ஜனநாயகத்தை மதிக்கத்தெரியாதவர்களாகவும் கொச்சைப்படுத்தியது

வல்லரசுகளை வளைப்பதாக மக்களை ஏமாற்ற முற்பட்டகூட்டமைப்புக்கு பெரும்பான்மையை ஆசனங்களைக்கொண்ட கிழக்கு மாகாணசபையில் ஆட்சியைக் கூடகைப்பற்ற முடியவில்லைஏன்வெறும் ஒரு பிரதேசசபையக்கூட தரமுயர்த்துவதற்கு கூட பேரம்பேசமுடியவில்லைஇறுதியாகஅரசியலமைப்பு உருவாக்கம்என்றும்அரசியல் தீர்வென்றும் மாயைக் காட்டிதமிழ்த்தேசத்திடமிருந்துவரும் பேராயுங்களில் ஒன்றானபொறுப்கூறல் முன்னெடுப்புகளையே நீர்த்துபோகச் செய்துசிங்களத் பேரினவாதத்தை பாதுகாத்ததுதமிழ் மக்களுக்குஇவ்வாறான தோல்விகளை ஏற்படுத்திய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே பொதுத் தேர்தல் நெருங்கியதும் பேரம்பேசும்பலத்தை தருமாறு மீண்டும் பிதற்றத் தொடங்கியுள்ளதுதமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை புறந்தள்ளிசிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக சரணகதி அரசியல்செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ்மக்கள் இனி வாக்களிக்கக் கூடாதுகொலைவெறியர்களின்கூடாரத்தில் கூடிக்குலாவி தமிழ் மக்களுக்கு துரோகம்செய்வோருக்கு தமிழ் மக்கள் பாடம் படிப்பிப்பதற்கானநேரம் வந்துள்ளதுதமிழர்களுக்கு துரோகம் செய்யும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பது மட்டுமன்றிஇலட்சியத்தில் உறுதியுடைய அரசியல் கட்சிக்குமானமுள்ள தமிழர்கள்இம்முறை வாக்களிக்க வேண்டும்

சரணகதி அரசியல் தமிழ் மக்களுடைய அரசியல்அபிலாசைகளை பூர்த்திசெய்யப் போவதில்லைமாறாகஒற்றையாட்சி முறைக்குள் தமிழ் மக்களை சிக்கவைத்துஎமது இருப்பையும் எதிர்காலத்தையும் இல்லாதுசெய்துவிடும்.       
           
ஆதலால்தமிழ்த் தேசத்தின் உயிர்ப்பை தக்கவைத்துதமிழர்களுக்கான மறுமலர்ச்சியை உருவாக்க விடுதலைஅரசியலை முன்னெடுக்கும் அரசியல் கட்சிக்கு தமிழ் மக்கள்வாக்களிக்க வேண்டும்விடுதலை அரசியல் என்பதுகரடுமுரடான பாதையில் மேற்கொள்ளும் நீண்ட பயணம்சவால்களும் சதுரங்க ஆட்டங்களும் நிறைந்தநெருக்கடியாக களம்ஆனால்இனத்தின் நலனுக்கானகொள்கை உறுதியோடுவிட்டுக்கொடுப்பின்றிதூரநோக்கோடு காய்களை நகர்த்துபவர்கள் இறுதியில்வெல்வார்கள்விடுதலை அரசியலில் பற்ற வைக்கும் பொறிநீண்ட காலத்தில் எமது தேசத்தின் சுதந்திரத்துக்குவழிகாட்டும் ஒளியாக மாறும்

சிங்கள ராணுவம் ஒப்பரேசன் லிபரேசன் இராணுவநடவடிக்கை மூலம் வடமராட்சி பிரதேசத்தை ஆக்கிரமித்துதமிழ் தேசத்தின் அடையாளத்தை அவமானப்படுத்தமுயன்றபோதுஜூலை 5  1987 ஆம் ஆண்டு நெல்லியடியில்நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் மூலம் சிங்களஆக்கிரமிப்பிலிருந்து வடமராட்சி மண் மீட்கப்பட்டது.  

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் நிலஆக்கிரமிப்பை தீவிரப்படுத்திய போதுஅதனைஎதிர்ப்பதற்கு திரணியற்று தமிழ்த் தேசம் அச்சத்தில்மூழ்கியிருந்ததுஅச்சூழலில்துணிகரமான முடிவை எடுத்துதடை உடைக்கப் புறப்பட்டது தமிழ் தேசிய மக்கள்முன்னணிஅதன் நிமிர்த்தமே முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னரான நில ஆக்கிரமிப்புக்கு எதிரானபோராட்டத்தைஒரு ஜூலை மாதத்தில் அதுவும் நெல்லியடிமண்ணில் தொடக்கி வைத்ததுதமிழ்த் தேசத்தின் நிலத்தைமீட்பதற்கான போராட்டம் அத்துடன் ஆரம்பித்து இன்றுவரை தொடர்கிறதுமுள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குபின்னர் நிலமீட்புப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்ததமிழ்த் தேசிய மக்கள் முன்னணிகூட்டுநினைவுகூரலுக்கும்குறிப்பாக மாவீரர்களைநினைவுகூருவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறதுஆதலால்தான்மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில்மாவீரர் நாள் போன்ற காலப்குதியில்தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன்போன்றவர்களின் வீடுகளை சிங்கள இராணுவம்முற்றுகையிட்டு அவர்களை வீடுகளுக்குள் முடக்கிவைத்ததுஅதனையும் தாண்டி அவர்கள் நினைவுகூரல்நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறார்கள்இதனாலேயேஅவர்களுக்கு எதிரான இராணுவ கெடுபிடிகள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுஅதன் அங்கமாகவேமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 11ஆவது ஆண்டைஒருபுறம் கொரொனா மறுபுறம் அதனை விடப் பயங்கரமானசிங்கள ஆட்சிபீடத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும்நடாத்தினார்கள்இதனால்அவர்கள் ஒருசட்டப்போருக்கும் முகம்கொடுத்து வெற்றிகண்டார்கள்இதனால்ஆத்திரமும் அச்சமும் அடைந்த சிங்களஆட்சியாளர்களும் அவர்களது படைகளும்கரும்புலிகள்நாளன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின்தலைமையகத்தை சுற்றிவளைத்து அச்சுறுத்தினார்கள்

அதுமட்டுமின்றிவலிந்து காணமற்போகச்செய்யப்பட்டோருக்காவும்அரசியற் கைதிகளின்விடுதலைக்காகவும் சர்வதேச ரீதியில் குரல்கொடுத்துவருகிறார்கள்தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்இத்தகைய செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசத்தின் நலனைமுன்னிறுத்திதாயகம்தேசியம்சுயநிர்ணய உரிமை என்றகோட்பாடுகளின் அடிப்படையில் அவர்கள் வரிந்துகொண்டஇலட்சியம் அடித்தளமாகவுள்ளதுசிங்கள தேசத்தினைஎதிர்க்க தயங்காத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிஅந்நிய சக்திகளின் பாரிய அழுத்தங்களுக்கும்விட்டுக்கொடுக்கவில்லைஇதனால்நான்காம் கட்டஈழப்போரின் இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழித்தவர்களும் அதற்கு உடந்தையாகஇருந்தவர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்உருவாக்கத்தை தடுக்க முனைந்ததார்கள்அதனையும்தாண்டி தோற்றம் பெற்ற போதுஅவர்களை கடந்தபாராளுமன்றத் தேர்தல்களில் நயவஞ்சகமான முறையில்தோற்கடித்துஅவர்களின் பயணங்களை நிறுத்தமுனைந்தார்கள்இதனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிகடும் நெருக்கடிகளையும் அவமானங்களை சந்திக்கநேர்ந்ததுஆயினும் தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காகநெருக்கடிகளுக்கும் அவமானங்களுக்கும் முகம் கொடுத்தபடியே தமிழ்த் தேசத்திற்கான விடுதலை அரசியலை முன்நகர்த்தி வருகிறார்கள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குதுரோகமிழைக்க போகிறது என்பதை கண்டறிந்துஅதனைஅம்பலப்படுத்தி கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தலைமையிலானவர்கள் வெளியேறியது சரிஎன்பது இன்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறதுஆதலால்தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியில்பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதுதமிழ்த் தேசிய கூட்டமைப்பின்வீழ்ச்சியென்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்வளர்ச்சிக்கு வழியமைத்து விடக்கூடாது என்பதற்காகவிடுதலைப் புலிகளை அழிக்க காரணமாக இருந்த தரப்புகள்தேர்தலுக்கு முன்னரே ஒரு கூட்டணியை உருவாக்கிவிட்டுள்ளார்கள்இது தமிழ் தேசிய மக்கள் முன்னணிஎதிர்கொண்டுள்ள புதிய சவால்

பாரிய சவால்கள்அச்சுறுத்தல்கள்அழுத்தங்களுக்குமத்தியிலும்தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்திஅடிமைவிலங்குகளை உடைக்கும் தூரநோக்குள்ள விடுதலைஅரசியலை முன்னெடுத்து வருகிறது தமிழ் தேசிய மக்கள்முன்னணிஅத்தகையவர்களை மக்களின் பிரதிநிகளாகதெரிவுசெய்யவேண்டியது மானமுள்ள ஒவ்வொருஈழத்தமிழனதும் வரலாற்றுப் பொறுப்பும் கடமையுமாகும்

சுதந்திரன் 

No comments