அமெரிக்க சுமந்திரன் மாற்றம்: சாம் சம்மதம்?


அமெரிக்க விசுவாசி சுமந்திரனை மடக்கி வைக்க கோத்தா அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதனை புரிந்து செயற்பட இரா.சம்பந்தன் தயாராகியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், கொறடா ஆகியோரை மாற்ற இரா.சம்பந்தன் சம்மதித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் இன்று (21) சந்தித்து கல்துரையாடிய போது, இவ்விடயம் ஆராயப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் உத்தியோகப்பூர்வமற்ற விதத்தில் இன்று இரவு சந்தித்து பேசினர்.

கட்சி தலைவர்களான  இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் இந்த பேச்சில் கலந்து கொண்டனர்.

இதன் போது பேச்சாளர் மற்றும் கொறடா ஆகியோரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழரசு விசுவாசிகள் அவ்வாறான மாற்றத்தை செய்ய செல்வமோ,சித்தரோ கோரவில்லையென கருத்து தெரிவித்துள்ளனர்.


No comments