குப்புற விழுத்தினார் மைத்திரி?


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இம்முறை அமைச்சரவையில் மூன்று அமைச்சுக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமல் சிறிபாலடி சில்வா ஆகியோர் நாளை அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகரவுக்கு அமைச்சுப் பதவியை வழங்க ஜனாதிபதியும், பிரதமரும் இணங்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments