துரைராசசிங்கத்திற்கும் சுமந்திரனின் அல்வா?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரம் முடிவுக்கு வராது நீடித்தே செலகின்றது.

எம்.ஏ.சுமந்திரனின் பணிப்பின் பேரில், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிற்கும்- கட்சி தலைவருக்கும் தெரியாமல் தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கபட்ட விவகாரத்தில் நாளுக்கு நாள் முறுகல் நிலை உச்சமடைந்துவருகின்றது.

இதனிடையே முதல் இரண்டரை வருடங்களிற்கு அம்பாறையின் கலையரசனிற்கும் மீதி காலப்பகுதியை துரைராஜசிங்களத்திற்கும் வழங்க ஆசை காட்டப்பட்டதாலேயே, கட்சி தலைவருக்கு எதிராக சதி செய்வதற்கு துரைராசசிங்கம சம்மதித்தாக மாவை சேனாதிராசா ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசியப்பட்டியல் நியமனத்தை தனக்கு தெரிவிக்காமல் செய்யக்கூடாது எனவும் கலையரசனை தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கும் கடிதத்தை நிறுத்தி வைக்கும்படியுமாக மாவை சேனாதிராசா கட்சி செயலாளரிற்கு  உத்தரவிட்டிருந்தார்.

எனினும், அதை மீறி துரைராசசிங்கம் தேர்தல்கள் திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதனை தொடர்ந்து கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments