தேசியம் பொய்க்கவில்லை:சீ.வீ.கே?நாடாளுமன்ற தேர்தலின் மூலம் தமிழ் தேசிய அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டோம் என தென்னிலங்கையில் சில அரசியல்வாதிகளால்  முன்வைக்கப்படும் கருத்துக்களை வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சிவிகே சிவஞானம் நிராகரித்துள்ளார்.

தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ் தேசியம் எந்த வகையிலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை .தமிழ் தேசியம் அதே நிலையில் தான் இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இரு உறுப்பினர்களும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த ஒருவரும்hக எல்லாருமே தமிழ் தேசியத்தை சேர்ந்தவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் அப்படிப் பார்த்தால் ஆட்கள் மாறி இருக்கிறார்களே தவிர கோட்பாடுகள் அல்லது தமிழ் தேசியம்  மாறவில்லைஎன சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


No comments