19 போகாது: பனையும் வளர்க்க போகிறார் கோத்தா?


19 திருத்த சட்டத்தை முழுதாக ஒழிக்க போவதாக சொன்ன கோத்தா அரசு பின்வாங்க தொடங்கியுள்ளது.

இப்போது அரசாங்கமாக 19ஐ முழுதாகா ஒழிக்க மாட்டோம், அதில் 'நல்ல' விஷயங்களை அப்படியே வைத்துக்கொண்டு, புதுசா 'கொஞ்சம்' விடயங்களை சேர்த்து, 20ம் திருத்தமாக கொண்டு வருவோம் என்கிறார்கள். ஆகவே என்ன வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்த்து பதிலளிப்போம் என வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பனைகளை வெட்டுவதைத் தடுக்க கடும் சட்டம்; கொண்டுவரவுள்ளதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.

கித்துல் மற்றும் பனை பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்கும் அவற்றுக்கான தடைகளை நீக்கி உற்பத்தி செயற்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கும் உடனடியான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதன் அவசியத்தையும் அதிகாரிகளுக்கு நான் தெளிவுப்படுத்தினேன்.


கித்துல் பயிருக்காக அரச நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் பனை மரம் வெட்டுவதை தடை செய்யும் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் நான் பணிப்புரையை விடுத்தேன்.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட இனங்காணப்பட்டுள்ள காணிகளில் உடனடியாக தென்னை பயிச்செய்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.


காணி பயன்படுத்தல் திணைக்களத்தின் மூலம் இனங்காணப்பட்டுள்ள கைவிடப்பட்ட வயல் நிலங்களும் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படும் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.
No comments