இங்கிலாந்தில் சுய தனிமைப்படுத்தல் 10 நாட்களாக நீடிக்கலாம்!

இருமல், அதிக வெப்பநிலை அல்லது சுவை அல்லது வாசனை இழப்பு உள்ளவர்கள், ஏழு நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்த வேண்டும் என்பது தற்போத வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. ஆனால் தனிமைப்படுத்துவதற்கான காலநீடிப்பு 10 நாட்களாக அதிகரிக்கபடவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இக் காலம் நீட்டிப்பை சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் இன்று வியாழக்கிழமை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்று நோயின் 2வது அலை குறித்து எச்சரிக்கை வெளிவந்த பின்னர் இந்த அறிவிப்பு வெளிவரவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments