தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் முழு பொது முடக்கம் அமுல்

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் (ஞாயிற்றுக்கிழமை) முழு பொது முடக்கம் அமுல்படுத்தப்படுகிறது.
மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமானவை மட்டுமே இயங்கும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
கொரோனாத்தொற்று காரணமாக, சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் ஏற்கெனவே முழு பொது முடக்கம் அமுலில் உள்ளது. இந்த முழு பொது முடக்கமானது, தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கமாக வரும் திங்கட்கிழமை முதல் மாறவுள்ளது.
ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் தழுவிய அளவில் முழு பொது முடக்கம் அமுல்படுத்தப்பட இருப்பதாக, தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments