விடாது துரத்தும் கனடா காசு!


கனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள்ள குகதாசனுடன் கனடாவில் புலிகள் அமைப்பொன்றின் முன்னாள் உப தலைவரிற்கு அதிக தொடர்பு உண்டு, அவ்வகையில் புலிகளின் கனடிய சொத்துக்களை இலங்கைக்கு மாற்றும் வேலைதிட்டமாக இருக்கலாமென இலங்கை அரச புலனாய்வு பிரிவுகள் சந்தேகம் கொண்டுள்ளன. 

குறித்த நிதி மாற்றம் வங்கியின் ஊடாக முன்னெடுக்கப்படாது உண்டியல் மூலமே அனுப்பப்பட்டுள்ளதால் இலங்கை மற்றும் கனடிய அரசுகள் இவ்விடயத்தில் தலையிட கோரப்பட்டுள்ளது.

வருடங்களில் கனடா கிளை 5 கோடி கூட வழங்காத போது 21 கோடி எங்கிருந்து வந்தது என கூட்டமைப்பின் கனடா பிரமுகர் நக்கீரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

எனினும் குகதாசனிடம். கட்சிக்காரரிடம் தொகையைச்சொல்லி, அவ்வளவும் தான் கனடாவில் சேர்த்ததாக பெருமை பேசியதே குகதாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments