மகிந்த தரப்பினை ஆட்டிப்படைக்கும் மஹேல?


முன்னணி வீரரான சங்கா மஹேலவுக்கான இதுவரை காணாத மக்கள் ஆதரவு அலையை இலங்கையில் எழுந்து வருகின்றது.அது மறுபுறம் அரச எதிர்ப்பு அலையாக மாறிவருகின்றது. இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையாக இது அமையலாமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இலங்கையிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் கட்டுவதாக கூறி திருடப்போன தம்மை அவர் தடுத்து நிறுத்தி விட்டார். 'திருடாதே' என்று சொன்னார். திருட்டுக்கும், மோசடிக்கும் அவர் எதிரி. ஆகவே திருடர்களாகிய தமக்கு அவர் எதிரி. ஆகவே அவரை அழித்திட வேண்டும். ஆகவே அவருக்கு எதிராக அவதூறு சொல்லி ஊடக தலைப்புகளை உருவாக்குவோம். மணிக்கணக்கில் கேள்வி கேட்டு மன அழுத்தங்களை உருவாக்குவோம். இப்படி சிந்தித்து, செயற்படும் மனசாட்சியே இல்லாத ஈனப்பிறவிகள் வாழும் நாடு இது, என தனது சீற்றத்தை பதிந்துள்ளார் மனோகணேசன்.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பிலான அரச அமைச்சர் ஒருவரது குற்றச்சாட்டையடுத்து சங்கா மஹேல விசாரணைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments