டக்ளஸிற்கு அல்வா கொடுத்த அங்கயன்?


அரச ஆதரவு தரப்பு டக்ளஸிற்கு அங்கயன் தரப்பு அல்வா கொடுத்து அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

யாழ் குடாநாட்டு மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வடமராட்சி உப்பாறு பிரதேசத்தில் மழை நீரை சேமித்து யாழ். குடாநாட்டிற்கான குடிநீரை வழங்கும் பாரிய திட்டம் மைத்திரிபால சிறிசேனவினால்  கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

'வடமராட்சி களப்பு குடிநீர்' திட்டம் எனும் குறித்த திட்டம் கடந்த ஒருவருடமாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் நேற்று மீண்டும் அதற்கு புத்துயிர் வழங்கி ஆரம்பித்து வைத்துள்ளார் ராஜபக்ச குடும்பத்தின் சமல் ராஜபக்ச.

சுமார் ஒன்றரை வருடங்களில் குறித்த திட்டத்தினை முடிக்க அமைச்சர் சமல் ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் வைத்து உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் அரச ஆதரவு தரப்புக்களான ஈபிடிபி, சுதந்திரக்கட்சி, பொதுஜனபெரமுன வேட்பாளர்கள் முண்டியடித்து நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

அப்போதே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை டக்ளஸிடம் கொடுத்து புகைப்படமும் பிடித்துக்கொண்டார் அங்கயன் இராமநாதன்.

2015ம் ஆண்டிற்கு முன்னர் தேர்தலிற்காக பகிரங்கமாக அடிபட்டுக்கொண்ட டக்ளஸ்-அங்கயன் தரப்பு பின்னர் பொது வெளியில் சந்தித்துக்கொள்வதில்லை.

இந்நிலையிலேயே டக்ளஸிடம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்து அல்வா கொடுத்துள்ளார் அங்கயன். 

முஸ்லீம்களது ஆதரவு தமக்கு இருப்பதாக காண்பிக்க கூட்டமைப்பின் ஆனோல்ட் தரப்பு போலி ஊடக சந்திப்புக்களை ஏற்பாடு செய்ய மறுபுறம் தாம் ஈபிடிபிக்கே வாக்களிக்கப்போவதாக முஸ்லீம் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இதனால் கூட்டமைப்பு அவர் ஆதரவு இவர் ஆதரவென கட்டிவரும் கோட்டை சிதற தொடங்கியுள்ளது. 

No comments