மூன்றில் இரண்டு பெரும்பான்மை கனவு?


தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக்கொள்ளலாம் என பகல் கனவு காண்பதாக,  ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில்  நடைபெற்ற  பிரசாரக் கூட்டத்திலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும்  கருத்துரைத்த அவர், "அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளால் மக்கள் விரகத்தியடைந்துள்ளனர். ஆகவே, இவ்வாறான நிலைமையில் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் சூனியமாகியுள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப்  பெற்றுக்கொள்ளலாம் என, கடந்த ஜனாதிபதி தேர்தலில், வெற்றி பெற்றது  போல், இந்த முறையும் வெற்றிப் பெறலாம் என அரசாங்கம் பகல் கனவு காண்கின்றது. அது பழிக்காது என்றார்.
கடந்த தேர்தலில்,  அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெற்றி,  இம்முறை சஜித் பிரேமதாஸ தலைமையிலான தொலைப்பேசி சின்னத்துக்கு  கிடைப்பது உறுதி. ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சஜித்தை பிரதமராக தெரிவுச் செய்ய மக்கள் ஆயத்தப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில் இனவாதம் மேலோங்கியுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவை இல்லை என, அரசாங்கத்தின் உயர் பீடம் கூறுகின்றது. ஆனால், கீழ்மட்டத்தில் உள்ள அடிவருடிகள் எமது வாக்குகளை பெற்றுக்கொள்ள மடிப்பிச்சை கேட்டு வருகின்றனர் என்றார்.  
எனவே,  அரசாங்கத்தினதும் அவர்கள் சார்ந்தவர்களதும் இதவாத போக்கிற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் சாவு மணி அடிக்க வேண்டும்.' என்றார்.

No comments