கூட்டணி, முன்னணி, பசுமை இயக்கம்: தெரிவென்கிறார் ஜங்கரநேசன்!


தமிழ் தேசியம் சார்ந்து இப்போது கூட்டமைப்பு நிச்சயமாக செயற்படவில்லை.

முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி,  மற்றும் எனது தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கமென்பவையே முள்ளிவாய்க்காலின் பின்னராகவும் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுகின்றன.

தமிழ் மக்கள் வாக்களிப்பதானால் இம்மூன்று தரப்பில் ஒரு தரப்பிற்கு வாக்களிக்க அழைப்பு விடுத்துள்ளார் பொ.ஜங்கரநேசன்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தின் கீழ் சுயேட்சையாக அவர் போட்டியிடுகின்றார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பொ.ஜங்கரநேசன் கூட்டமைப்பு தற்போது செய்து கொண்டிருப்பது தமிழ் தேசியத்தை சிங்கள தேசியத்துடன் கரைத்துவிடும் ஒரு கைங்கரியத்தையே.

அதனை எம்.ஏ.சுமந்திரன் செய்கின்றார்.ஆனால் கூட்டமைப்பின் ஏனையோர் எம்.ஏ.சுமந்திரனை குற்றஞ்சுமத்தி  தம்மை நியாயவாதிகளாக காண்பிக்க முற்படுகின்றனர்.

உண்மையில் அவர்கள் தமிழ் தேசியத்தை நேசிப்பவர்களெனின் முதலில் எம்.ஏ.சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்க முன்னிற்கவேண்டும்.

உண்மையில் கூட்டமைப்பினர் தற்போது டக்ளஸ் செய்ததையே தாமும் செய்யும் நிலைக்கு வந்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் கொலையாளிகளை ஜநா வரை சென்று காப்பாற்றிய எம்.ஏ.சுமந்திரனுடன் இணங்கி தமிழ் தேசிய வாக்குகளை அவருக்கு பெற்றுக்கொடுக்கும் நிலைக்கு சிவஞானம் சிறீதரனை கொண்டு சென்றதே தற்போது வரை செய்த சாதனையெனவும் பொ.ஜங்கரநேசன் தெரிவித்தார்.


No comments