கொலைகளிற்கு விசாரணையென்கிறார் சஜித்?


கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தான் ஆட்சி அமைத்தால் அவ்விடயம் தொடர்பான விசாரணை முழு அளவில் முன்னெடுக்கப்படும் என்றும் கூறிப்பிட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை காலை சஜித்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. இதில் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் உமாசந்திர பிரகாஸ் மற்றும் கணேஸ் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது சஜித் பிரேமதாசாவிடம் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் மற்றும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்த விசாரணைகளும் கடந்த கால அரசாங்கங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

நீங்கள் ஆட்சி அமைத்தால் இவ்விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்ளப்படுமா என்று ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் அவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பான முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விசாரணைகள் வடக்கு,கிழக்கு மற்றும் தொற்கு என்ற பாகுபாடுகள் இல்லாது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

உயிர் பலி ஏற்படாத நிலை உருவாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஸ்டஈடு கொடுக்கப்படவேண்டும். இவற்றை நான் செய்வேன். நான் செல்வதைத்தான் செய்வேன் என சஜித் பிறேமதாசா தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ் ஊடக ஆசிரியர்கள் குழுவோன்று நேற்று மகிந்தவை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments