பிறேமதாசாவின் நினைவு கல் கரவெட்டியில்?


யாழ்ப்பாணம் நெல்லியடி இராஜ கிராமத்தில் மறைந்த ஜனாதிபதி பிரேமதாசவினால் கட்டிக் கொடுக்கப்பட்ட 85 வீட்டுத் திட்டங்களின் நினைவுக் கல்லை, சஜித் பிரேமதாச இன்று (2) தந்தையின் நினைவாக திரைநீக்கம் செய்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து இராஜ கிராம மக்களைச் சந்தித்து உரை நிகழ்த்தினார். இதன்போது மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ராஜ கிராமத்தில் உள்ள கரவை சுடர் உதைபந்தாட்ட வீரர்களுடன் இணைந்து கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டார்.

No comments