2,646 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்?

இலங்கையில் இதுவரை 2,646 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்று (13) மாத்திரம்  29 கொரோனா கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் இருவர் மாலைதீவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என்பதுடன் இராஜாங்கனையை சேர்ந்த இருவரும் உள்ளடங்குகின்றனர்.

சேனபுர தனிமைப்படுத்தல் நிலையத்தின் 11 பேர் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் 14 பேர் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 1,981 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments