தேர்தலின் பின்னர் எம்.சி.சி உடன்படிக்கை?


பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் அரசாங்கம் எம்.சி.சி உடன்படிக்கையில் உடனடியாக கைச்சாத்திடும் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எம்.சி.சி உடன்படிக்கை கிழித்தெறியப்படும் என தெரிவித்த அரசாங்கம் தற்போது அதனை ஆராய்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்.சி.சி உடன்படிக்கை நாட்டின் இறைமைக்கு ஆபத்தானது என்பதால் அதனை தீயிட்டுகொழுத்தவேண்டும் என முன்னர் எதிர்கட்சியிலிருந்தவர்கள் தெரிவித்தனர் என டில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்
அவர்கள் தற்போது ஆட்சியில் உள்ளனர் எம்.சி.சி உடன்படிக்கையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய முயல்கின்றனர் என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

No comments