புதுக்குடியிருப்பில் மனித எலும்புக்கூடுகள்?


முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில், மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட் டுள்ளன.


இதையடுத்து, இன்று நீதிமன்றத்தின் அனுமதியுடன், அப்பகுதியில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாற்பது ஏக்கர் கொண்ட இக்காணியை, நேற்று முன் தினம் கனரக இயந்திரத்தைக் கொண்டு துப்புரவுசெய்யும்போது, மனித எலும்பு எச்சங்கள் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே கரும்புலிகள் தினத்தில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட குண்டே இயக்கச்சியில் வெடித்தது என விசாரணையாளர்கள் தெரிவிப்பதாக ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இயக்கச்சியில் முன்கூட்டியே வெடித்த குண்டை முல்லைத்தீவிற்கு கொண்டு சென்று வெடிக்கவைப்பதற்கான திட்டம் காணப்பட்டது என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் போராளிகளும் கிளிநொச்சியை சேர்ந்த பல இளைஞர்களும் கரும்புலிகள் தினத்தை கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர் என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர் என ஜலன்ட் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை சம்பவத்தினை தொடர்ந்து குண்டு தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னாள் பேராளியின் மனைவியையும் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,அவரும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளி, குண்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவின் போராளி அவரதுபெயர் மேனன் என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மேனன் முதலில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவரது நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அனுராதபர வைத்தியசாலையி;ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஐலன்ட் தெரிவித்துள்ளது.

மேனனின் வீட்டை சோதனையிட்டவேளை இரு குண்டுகளையும் வெடிக்கவைக்கும் கருவிகளையும் கண்டுபிடித்தனர்.முன்கூட்டியே குண்டு வெடித்ததன் காரணமாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் கரும்புலிகள் தினத்தில் தங்கள் திட்டத்தினை முன்னெடுக்க முடியவில்லை என ஐலன்ட் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டவர் எனவும்விடுதலையான பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியில் இணைந்தவர் எனவும் தெரியவந்துள்ளதாக விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனஐலன்ட் தெரிவித்துள்ளது.

No comments