பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகின்றது

பிரான்சின் அடுத்த சில வாரங்களில் மூடப்பட்ட பொது இடங்களிலும், வணிக நிலையங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது என  பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் கூறியுள்ளார்.

நேற்று செவ்வாக்கிழமை ஊடகவியலாளரிடம் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் 30,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற இந்த வைரஸ் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆனால் இரண்டு மாதங்கள் பூட்டப்பட்ட பின்னர் பிரான்ஸ் கடற்கரைகள், பார்கள் மற்றும் உணவகங்களைத் திறப்பதால் சில இடங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவுகிறது.

கொரோனா வைரஸ் திரும்பி வருவதற்கான அறிகுறிகள் எங்களிடம் இருக்கின்றன. அதனை எதிர்பார்த்து எதிர்கொள்ள நாங்கள் தயார் நிலையில் இருக்வேண்டும்.

அடுத்த சில வாரங்களில், மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

சக குடிமக்கள் வெளியில் இருக்கும்போது முடிந்தவரை முகமூடிகளை அணியுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தற்போது பொது போக்குவரத்துகள் மற்றும் சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறையில் உள்ளது. ஆனால் கடைகளில் முகமூடிகள் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments