சுமந்திரனே குழப்பினார்?


இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த விவாத நிகழ்வின் விதிமுறைகளை மாற்ற சொல்லி எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டமை அம்பலமாகியுள்ளது.

நிகழ்ச்சி தயாரிப்பாளர்களால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட விதிமுறைகளின் படி ஒவ்வொரு கட்சியிலும் கட்சியினால் பிரேரிக்கப்படுகின்ற இருவர் பங்குபற்றுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வகையில் தமிழரசுக்கட்சியின் உதவி பொதுச்செயலாளர் பிரேரிக்கப்பட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இரு சட்ட ஆலோசகர்கள் பிரேரிக்கப்பட்டனர்.

கஜேந்திரகுமார் வரப்போவதில்லை என உறுதியான பின்னர் நேற்று இரவு பத்துமணியளவில் தொலைபேசி அழைப்பு எடுத்து தான் பங்கெடுக்கப்போவதில்லையென சுமந்திரன் தான் பின்வாங்கினார்.

இதனாலேயே நிகழ்ச்சி இரத்தானமை குறிப்பிடத்தக்கது.

No comments