இனி விமோசனம் இல்லை:ஈரோஸ்


பாராளுமன்ற தேர்தலில் ஈரோஸ் கட்சிக்கு ஒரு ஆசனமாவது கிடைக்காவிட்டால் தமிழ் மக்களுக்கு விமோசனம் என்பதே இல்லாத அவல நிலை ஏற்படும் என்று அக் கட்சியின் தலைமை வேட்பாளர் ரவிராஜ் என்று அழைக்கப்படும் சி.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.



யாழ்.ஊடக அமையத்தில் இன்று முற்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானபம் நேற்று  வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 70 வருடமாக கூட்டமைப்பு எதை கூறினார்களோ அதே விடயத்தை தான் இம்முறை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறுகின்றார்கள்.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் சமயல் செய்வது போன்றது. அதாவது எதிர்வரும் 5 திகதி சமையலுக்கு உலையில் அரிசி போடுவார்கள். அந்த அரிசி வேகவில் என்று பெய் சொல்லியே எதிர்வரும் 5 வருடங்களை கழித்து வடுவார்கள்.

தமிழ் அரசியல் கைதிகளை கூட்டமைப்பால் விடுவிக்க முடியாது. மாறாக இன்னமும் அரசியல் கைதிகளை உருவாக்க அல்லது எண்ணிக்கையை அதிகரிக்கவே அவர்களால் முடியும்.

கூட்டமைப்பினரிடம் அபிவிருத்தியோ அல்லது, அரசியல் தீர்வு குறித்தோ எந்த ஒரு பொறிமுறையும் இல்லை. தலைவரின் தூர நோக்கத்தாலே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த நோக்கத்தை கூட்டமைப்பால் நிறைவேற்ற முடியாது.

கூட்டமைப்பினர் போன்றே நீதியரசர் விக்னேஸ்வரனும் திட்டங்கள் எதுவும் இல்லாத கதைகளையே கூறிவருகின்றார். அவராலும் தமிழினத்திற்கு எந்தவிதமான பயனையும் பெற்றுக் கொடுக்க முடியாது.

எம்மை பொறுத்தவரையில் அபிவிருத்தி, அரசியல் உரிமை சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். உரிமை என்று பட்டினியால் சாக கூடாது.

தேசிய வருமானத்தில் நாமும் பங்கெடுத்து கணிசமான வருமானத்தை பெற்று கொடுப்பவர்களாக இருந்தால் எமக்கான அபிவிருத்தி தேடி வரும். இதற்கு சிறந்த பொறிமுறைகள் தேவை.

அவ்வாறான பொறிமுறைகள் எங்களிடம் உள்ளது. எமது திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகின்றோம்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் ஈரோஸ் கட்சிக்கு ஒரு ஆசனமாவது கிடைக்காவிட்டால் தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லாத அவல நிலை ஏற்படும் என்றார்.

No comments