இலங்கை சிறைகள்:தலையிடியாக மாறுகின்றதா?


கோத்தபாயவை சிறையிலிருந்து கொல்ல திட்டமிட்ட பாதாள உலக கும்பல் விவகாரம் உச்சம் பெற்றுள்ளது.

இதனிடையே பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான கொஸ்கொட தாரக்க மற்றும் லெசீ ஆகிய குழுவினால் சிரேஸ்ட சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கைதிகள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட போது, அது தொடர்பில் ஆராய்வதற்காக சென்ற குழுவினருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தாம் உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாதாள உலக கும்பல் முக்கியஸ்தர்கள் கோத்தா உத்தரவில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments