சிவாஜிக்கு சோதனை: நீதிமன்றிற்கு அழைப்பு!

நவாலி படுகொலை நினைவேந்தலை தடுக்க இலங்கை அரசு முழுஅளவில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

நாளைய நவாலி படுகொலை நினைவேந்தலின் 25ம் ஆண்டினை முன்னிட்டு படுகொலையானவர்களை நினைவு கூர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நினைவேந்தலை தடுக்க ஏதுவாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கத்தை இன்று நீதிமன்றில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இன்று சுன்னாகம் நீதிமன்றிற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

நாளைய தினம் 150 தீவிர ஆதரவாளர்களுடன் நவாலியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தே இன்று நீதிமன்றிற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

No comments