யாழில் மாவட்ட செயலகம் முன் வாள்வெட்டு?


யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அலுவலக உதவியாளர் மீது இனம் தெரியாதோர் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அலுவலரின் கையில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அங்கு நின்ற மக்களால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது அலுவலகரின் மோட்டார் சைக்கிலும் சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் உடனடியாக யாழ் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments