சுமந்திரனிற்கு மானமிருக்கின்றதா: எழுந்த சந்தேகம்!

vimaleswary
21 கோடி எங்கே என கேள்வியெழுப்பி பொய் பரப்புரை மேற்கொள்வதாக, குற்றச்சாட்டை முன் வைத்து தமிழரசுக்கட்சி மகளிரணியை சேர்ந்த விமலேஸ்வரியிடம் 1000 கோடி மான நஸ்ட ஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்.


இதனிடையே உதயன் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்று குறித்து டக்ளஸ் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் அப்போது உதயன் சார்பில் முன்னிலையான சுமந்திரன் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மானம் இருந்ததாகவும் அது மீறப்பட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கென வாதிட்டிருந்தார்.

அதாவது அவருக்கு மானம் இருந்தால் என கேள்வி எழுப்பிய சுமந்திரன் தற்போது தனக்கு மானம் இருக்கின்றதென நிரூபிக்க வேண்டிய தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments