அனைவரையும் ஒருங்கிணைக்க ஈரோஸ் பாடுபடும்!


ஈரோஸ் அமைப்பு கலைக்கப்பட்டு விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைக்கப்பட்டமையால் வன்னியில் பாலகுமார் இருந்த போதும் கூட்டமைப்பிற்குள் இணைந்து கொள்ளக்கூடிய சூழல் இருக்கவில்லையென அவ்வமைப்பின் தலைவர் அருளப்பு இராசநாயகம் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஈரோஸ் என்றழைக்கப்பட்ட ஈழவர் ஜனநாயக முன்னணியின் சார்பில் அதன் தலைவர் அருளப்பு இராசநாயகம் மற்றும் முக்கியஸ்தர் ரவிராஜ் என்றழைக்கப்படும் முருகதாஸ் ஆகியோர் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தனர்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அருளப்பு இராசநாயகம் கூட்டமைப்பு உருவாக்கபட்ட போது அது தமிழ் மக்களிற்கு நல்லதொரு தீர்வை கொண்டுவர நம்பியிருந்தோம்.ஆனால் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.

தற்போது மூன்று தரப்புக்களாக தமிழ் தரப்புக்கள் பிரிந்து நிற்கின்றன.இவ்வாறு பிரிந்து நிற்பதால் தமிழ் மக்களிற்கு ஏதும் கிட்டப்போவதில்லை.

அனைத்து தரப்புக்களையும் இணைந்து தமிழ் மக்களிற்கு தீர்வை பெற்றுத்தரவே ஈழவர் ஜனநாயக முன்னணி தேர்தல் களத்தில் குதித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இதனிடையே பிரிந்து அரசியலில் ஈடுபடுவது மக்களது கோரிக்கைகளை பலவீனப்படுத்துமென தெரிவித்த அவர் அரசு திட்டமிட்டு இத்தகைய பிளவுகளை தோற்றுவிப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக்கு முண்டு கொடுத்து கூட்டமைப்பு அரசியல் தீர்வை தரப்போவதாக தெரிவித்த போதும் ஏதும் நடக்கவில்லை.

மாறி மாறி  ஆட்சியிலிருக்கும் தெற்கு தரப்புக்கள் தமிழர்களிற்கு தீர்வை தரக்கூடாதென்பதில் ஒற்றுமையாக இருப்பதாகவும் மற்றுமொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

ஈரோஸ் என்றாலே ஒருங்கிணைப்பு தரப்பு என்பது மக்களிற்கு தெரியுமெனவும் ரவிராஜ் தனது உரையில் தெரிவித்தார்.

அத்துடன் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் கொள்கை பிரகடனம் என்பவை விரைவில் வெளியிடப்படுமெனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே இணைந்து செய்றபட ஈபிடிபியுடன் பேசப்படுவதாக வெளிவந்த செய்தியையும் அவர்கள் மறுதலித்திருந்தனர்.

No comments