பாரவூர்தி விபத்துக்குள்ளனது! ஓட்டுநர் பலி!
திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி வில்கம் விகாரை பகுதியில் பாரவூர்தி ஒன்று இன்று புதன்கிழமை (03.05.2020) விபத்துக்குள்ளானது.
விபத்தில் பாரவூர்தி ஓட்டுநரான கண்டி- கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சதுன் விக்ரமசிங்க (33வயது என்பவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக பயணித்துக்கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை சடல அறையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment