தமிழக முதல்வரின் தனிச்செயலர் கொரோனாவால் மரணம்!

கொரோனா தொற்று தமிழகமெங்கும் தனது கொடூரமான பாதிப்பை செலுத்தி வருகிறது.தமிழக முதல்வரின் தனிச்செயலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளார்.  

தமிழகத்தில் சாதாரண மக்கள் முதல் அனைவரும் கொரோனா வைரஸால் பாதிக்கும் நிலை உள்ளது. சமீபத்தில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்தார். அதிமுக எம்எல்ஏ பழனி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அகில இந்திய அளவில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச ஆளுநர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில் இன்னொரு உயிரிழப்பாக தமிழக முதல்வரின் தனிச்செயலர் தாமோதரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை தமிழகத்தில் கொரோன தாக்கத்தின் விளைவுகளை காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments