பல்கலைகளில் பரீட்சையும் பணமும்?


இலங்கையின் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் உள்ள சகல பீடங்களினதும் இறுதி ஆண்டு மாணவர்களிற்கான பரீட்சையினை நடாத்த மாணியங்கள் ஆணைக்குழு நேற்றைய தினம் அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளை பல்கலைக்கழக மாணவர்களிற்கான மகாபொல கொடுப்பனவுகளை வழங்கவும் அரசு தீரமானித்துள்ளது.

மானியங்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றபோதே மேற்படி முடிவும் எட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் ஏற்கனவே மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவ்கள் பல்கலைக் கழக விடுதிகளிற்கு அழைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பிற்கு உட்படுடத்தப்படும் நிலையில் இவர்களிற்கான பரீட்சைகள் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடியும். எனவே ஏனைய பீடங்களின் இறுதி ஆண்டு மாணவர்களையும் அழைத்து தனிமைப்படுத்தலை ஆரம்பிக்க 15 ஆம் திகதி முதல் 20ம் திகதி வரையில் காலத்தினை வழங்கி மாணவர்களை 14 நாட்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும்.

அவ்வாறு தனிமைப்படுத்தல் முடிவுற்றதும் அவர்களிற்கான பரீட்சையினை நடாத்த முடியும். இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments