கோத்தா சொன்னதை செய்யவில்லை:சஜித்


கொரோனா காலத்தில் அரசாங்கம் வழங்குவதாக அறிவித்த லீசிங் கட்டண சலுகை உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அந்த சலுகை உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படாமையின் காரணமாகவே லீசிங் நிறுவனங்கள் இன்று வாகனங்களை கையகப்படுத்தும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு எதிராக குரல் கொடுத்தமையாலேயே இன்று இலங்கை தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவின் உயிர் பிரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வழங்குவதாக அறிவித்த லீசிங் கட்டண சலுகை உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படாமையே சுனில் ஜயவர்தனவின் உயிரிழப்புக்கு பிரதான காரணமாக அமைந்தாகவும் அவர் கூறினார்.
லீசிங் கட்டண சலுகை வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் அது குறித்த தெளிவுபடுத்தல் லீசிங் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு கனவு உலகத்தை காண்பித்து அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ள முயற்சித்தாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு ஒருவரை வெட்டவெளியில் கொலை செய்ய முடியுமா? மக்களுக்குள்ள பாதுகாப்புக்கு என்னவாயிற்று? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இன்று ஆர்பாட்டங்களை நடத்தினால் தாக்குதல்கள் நடத்தப்படுவதோடு பெண்கள் துஸ்பிரயோக சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

No comments