ஜூன் 29: பாடசாலைகள் ஆரம்பம்!


பாடசாலைகளை மீண்டும் திறக்கும் தினம் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான தினம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை கூறினார்.
இதன் அடிப்படையில், ஜூன் மாதம் 29ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரப்பட உள்ளது.
இதன்படி ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும். எனினும், மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.
பாடசாலைகள் 4 கட்டங்களாக திறக்கப்பட உள்ளன.
இதன்படி ஜூலை 6ஆம் திகதி மாணவர்களுக்காக திறக்கப்பட உள்ளது.
இது முதலாவது கட்டம். இதன்போது, தரம் 13, தரம் 11, தரம் 5 ஆகிய வகுப்புகள் ஆரம்பமாகும்.
அத்துடன், உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் அக்டோபர் 6ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை இடம்பெறும்.
அத்துடன், தரம் 5 பரீட்சை 13ஆம் திகதி செப்டெம்பர் ஞாயிறன்று இடம்பெறும்.
இதேவேளை, இணைய வழிக் கல்வியை எதிரியாக பார்க்க வேண்டாம் எனவும் அமைச்சர் கோரினார்.

No comments