வவுனியாவில் 1200வது நாளை தாண்டி போராட்டம்?


வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியது.


இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று (01) மதியம் 12.30 மணியளவில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும்இ வெளிநாடு தலையிட்டு எமக்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும்இ உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கேஇ சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கதறி அழுது தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.

உறவுகள் கருத்து தெரிவிக்கும் போதுஇ தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இளம் சமூதாயத்தினர் தான் தமிழர்களின் பிரச்சனையினை தீர்த்து வைப்பார்கள் என தெரிவித்தனர்.

கோரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சமூக இடைவெளியினை பேணி இவ் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

No comments