கூட்டமைப்பு கூட்டத்திற்கு போனால் குழப்பம்?


வடமராட்சி பகுதியில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் செய்தி கேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக இலங்கை காவல்துறையினர்; வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கடுமையான சோதனை நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டிருந்தது.எனினும் கைகவசமோ போதிய முன்னேற்பாடோ இன்றி சோதனை மேற்கொண்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் ஆட்சேபனை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக ஊடகவியலாளர்களது தொழில்சார் உபகரணங்களை சோதனையிட்ட போது அதற்கு எதிராக ஆட்சேபனை வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் வடமராட்சியில் குண்டுகள் வெடிப்பதால் ஊடகவியலாளர்கள் மீதான சோதனை தவிர்க்கப்பட முடியாதென காவல்துறை வாதிட்டுள்ளது.

மாலுசந்தி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழரசு கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் 7 வேட்பாளர்களின் பிரச்சார கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில் போதிய கைகவசமின்றி முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையினை ஊடகவியலாளர்களுள் ஒருவரான மதிவதனன்  புகைப்படம் எடுத்திருந்தார்.

இதன் போது அவருடன் முரண்டபட்டுக் கொண்ட காவல்துறையினர் தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட 3 குற்றங்கள் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் எதிர்வரும் 30 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே ஊடகவியலாளரை அச்சுறுத்தி அவரது பணியினை தடுக்க முற்பட்ட காவல்துறை மறுபுறம் கொரோனா முன்னேற்பாடுகள் இன்றி சோதனை செய்த விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

No comments