கிளிநொச்சியில் குளியலறை?


கிளிநொச்சி நகரில் நீண்ட கால குறைபாடாக விளங்கிய பொது குளழயல் கூடத்தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகருக்கு வருகைதரும் பொதுமக்களுக்கும் அரச மற்றும் கல்வித்தேவைக்காக நகருக்கு வருகின்ற உத்தியோகத்தர்களினதும் மாணவர்களினதும் சந்தை வர்கத்கர்ளினதும் அன்றாட தேவையை கருத்திற்கொண்டு நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சின் சுகாதாரத் திட்டமிடல் துறையிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று சுமார் 1 கோடி 22 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொதுக்குளியல் அறைத்தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

No comments