வெடித்தது டைனமெட்! இருவர் படுகாயம்!

திருகோணமலை - கிண்ணியா பெரியாற்றுமுனை கரையோரப் பகுதியில், இன்று செவ்வாய்க்கிழமை (09) மதியம் டைனமெட் வெடிமருந்து வெடித்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளர்.

படுகாயமடைந்த இருவரும், கிண்ணியா தள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடிக்காக டைனமட் வெடிபொருளை, இரும்பு வெட்டும் சிறியரக வாளால்  அறுத்துக் கட்டும்போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா, இடிமன், பெரியாற்றுமுனை பகுதிகளைச் சேர்ந்த 37, 26 வயது குடும்பஸ்தர்கள் இருவரே, இந்த வெடிப்புச் சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.  

சம்பவ இடத்துக்கு விரைந்த கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments