யாழ்.வந்தார் ரவிராஜ் சசிகலா?


இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜாவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பெண் வேட்பாளருமான சசிகலா ரவிராஜுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போது, யாழ்.மாவட்டத்தில் உள்ள பெண் அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அச்சந்திப்புக்களின் ஊடாக பெண்கள் சார்ந்த விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தேர்தல் அறிக்கையில் முக்கிய விடயங்களை உள்ளீர்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஒரேயொரு பெண் வேட்பாளர் என்ற அடிப்படையிலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் அர்ப்பணிப்பான மக்கள் சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்குமாக சசிகலா ரவிராஜின் வெற்றிக்காக ஏனைய வேட்பாளர்களும் கூட்டிணைந்து பணியாற்றுவது அவசியமென்றும் அதுபற்றி கலந்துரையாடல்களை அடுத்துவரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ளதாகவும் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

அத்துடன் தென்மராட்சியில் முன்னெடுக்கவுள்ள தேர்தல் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது பரஸ்பரம் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments