தேசியத் தலைவரின் சிந்தனைக்கு உரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர்

அமைப்பு இயற்கை எனது நண்பன்
வரலாறு எனது வழிகாட்டி
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்  

- தமிழீழத் தேசியத்தலைவர் =

உயர் சிந்தனை உரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு.

உலகச்சுற்றுச்சூழல் மாசடைந்து ஓசோன் படலமானது ஆபத்தான கட்டத்தை அடைந்து உயிர்கள் யாவும் அழிவின் கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் சில லட்சம் உயிர்களை பலிகொண்டு சுற்றுச்சூல்மூலம் ஓசோன்படலத்தையும் அதிலிருந்து வரவிருந்த கதிர்த்தாக்கத்திலிருந்தும் கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றியது தான் கோவிட் 19 என்ற வைரசு ஆகும்.

இந்த வைரசு படிப்படியாக மறைந்து போகின்ற நிலையில் மீண்டும் சுற்றுசூழல் மாசடையும் ஆபத்தான நிலைக்கு செல்வதாக சர்வதேசம் சுகாதார மையம் அறிவித்துள்ள நிலையில், எமது தேசியத் தலைவரின் தீர்க்கசிந்தனையில் அமைந்த வார்த்தைகளான “ இயற்கை எனது நண்பன் ’’ என்ற சொல்லுக்கு   அர்த்தத்தை இன்று தான் முழு உலகமுமே உணர்ந்துள்ளது.

இயற்கையால் இனி வரப்போகும் பேரழிவிலிருந்து மண்ணுயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் இயற்கையை எமது நண்பனாக கருத வேண்டும். அந்த நண்பனை துன்பம் வரும் வேளையில் கைகொடுக்க வேண்டும். அது அடுத்து வரும் இளைய தலைமுறையினரிடம் தான் உள்ளது. அதனையொரு முன்னோடிகளாக பிரான்சு தமிழ் இளையோர் தமது கையில் எடுத்திருந்தனர்.

பிரான்சின் நாட்டின் தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் பாரிசு ( லாச்சப்ல் பகுதி) பிரதேசத்தில் தமது உன்னத பணியாக “ இயற்கையை நண்பனாக்குவோம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’’ என்ற கருப்பொருளுக்கு வலுக்கொடுத்து 21.06.2020 அன்று தமது சுப்பரவு செய்யும் பணியினை ஆரம்பித்திருந்தனர்.

கடந்த கோவிட் 19 காலப்பகுதியாலும், தற்போது அது தளர்த்தப்பட்டதால் இக்குட்டி யாழ்ப்பாணம் ( லாச்சப்பல் பகுதி ஏனைய வெளிநாட்டவர்களால் வழமையை விட அதிகளவிலான துப்பரவின்மையாக்கப்பட்டு காணப்பட்டதால், இப் பகுதியாது தமிழர்களின் 450 மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் கொண்டதாகவும், எமது தமிழ்மக்கள் குடும்பம் குடும்பமான உறவுகளை பலப்படுத்தும் இடமாக இருந்து வருகின்றமையாலும், இப் பகுதி மாசடைந்து துப்பரவு இன்றி காணப்படுவதால், பிரெஞ்சு மக்களினதும், வேற்று மக்களினதும் முகச்சுளிப்புக்கும் உள்ளாகி வருகின்ற நிலையில், இவ் துப்பரவு பணியை மேற்கொண்டு எமது  இனத்திற்கு ஏற்படுகின்ற களங்கத்தை தமிழ் இளையோர்கள் மாற்றியுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இப்பணி அரசபணியாக இருந்த போதும் அதில்; காணப்பட்ட அக்கறையீனத்தையும் (பாதுகாப்பு உட்பட பலவிடயங்களில்) அவதானிக்கக் கூடியதாகவும் இருந்திருந்தது.

பிரான்சு மண்ணில் வாழும் எமது தேசத்தின் நாளை சந்ததி தானும், தன்வீடு, தன்சுற்றம், தம் கல்வி, தம்வாழ்வு என்று வாழாமல் எனதுஇனம், எனதுஉலகம், எனதுசந்ததி, எமது உயிர்கள், எமது சுற்றுச்சூழல் , எமது  பாதுகாப்பு என்று பொதுவான விடயத்தில் தமிழீழ தேசியத்தலைவரின்  சிந்தனையில் இவர்கள் மேற்கொண்ட இவ் உயர்வான பணி  மகாத்தானது. இப்பணி பிரான்சு அரசமட்டத்தின் கவனத்திற்கும் எடுத்துச் சொல்லப் பட்டிருக்கின்றது. தொடரட்டும் இவர்களின் உன்னத பணி பாராட்டுவோம். எம்மை தாங்கிய பிரான்சு மண்ணை எந்த வழியிலும் கலங்கப்படுத்தாது தமிழர்கள் நாம் பயணிப்போம். எம்மால் முடிந்தளவு பங்களிப்போம்.

No comments