பிரச்சார கூட்டத்தில் 500 பேர் மட்டுமே!


தேர்தல் பிரச்சாரங்களில் பங்கெடுக்கும் ஆதரவாளர்களது எண்ணிக்கை 500இனை உச்ச எல்லையாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே பொதுத்தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் ஆரம்பத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், திகதி குறித்த இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை, ஆணைக்குழு கூடி முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் இலக்கங்களும் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை, தேர்தல் வழிகாட்டல் குறிப்புக்களை சுகாதார அமைச்சு அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்திருந்தது. அந்த குறிப்புக்களை தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குறிப்புக்களின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாவட்டம் தோறும் ஒவ்வொரு பெரிய கூட்டங்கள் வைக்க அனுமதிப்பதுடன், அதில் அதிகபட்சமாக 500 பேரே கலந்து கொள்ளலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்து கொள்பவர்களிற்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும்.

இந்த கூட்டங்களில் கலந்து கொள்பவர்களின் பெயர் விபரம், தொலைபேசி இலக்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

No comments